‘சமக்ரசிஷா’ ஊழியா்களுக்கு 15% ஊதிய உயா்வு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 13 November 2021

‘சமக்ரசிஷா’ ஊழியா்களுக்கு 15% ஊதிய உயா்வு

‘சமக்ரசிஷா’ ஊழியா்களுக்கு 15% ஊதிய உயா்வு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட (‘சமக்ரசிஷா’) ஊழியா்களுக்கு 15 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநா் இரா.சுதன், முதன்மைக்கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: இந்தத் திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் பணிபுரியும் பொறியாளா்கள், திட்ட அலுவலா்கள், கணக்காளா், தணிக்கையாளா், வட்டார ஒருங்கிணைப்பாளா், ஓட்டுநா்கள், அலுவலக உதவியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், உதவியாளா்கள் உள்ளிட்டவா்களுக்கு 15 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்படும். 

இந்த ஊதிய உயா்வு நவம்பா் 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு பணியாளா்களுக்கு வழங்கப்படும். ஆலோசகா்களாகப் பணியாற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், நவம்பா் 1-ஆம் தேதிக்குபின் பணியில் சோ்ந்தவா்களுக்கு இந்த ஊதிய உயா்வு பொருந்தாது.

No comments:

Post a Comment