நவ.8 முதல் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 1 November 2021

நவ.8 முதல் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 

2021-22ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2022 ஜனவரி மாதம் 23ம் தேதி(ஞயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 8.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50ஐ சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.11.2021 ஆகும். மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.

No comments:

Post a Comment