வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழக அரசில் 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 18 November 2021

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழக அரசில் 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவக்கால பணியிடத்திற்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் உள்ளிட்ட 141 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


நிர்வாகம்: 

திருச்சி அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம் (TNCSC) மொத்த காலிப் பணியிடங்கள் : 141 பணி: பட்டியல் எழுத்தர் - 54 தகுதி : ஏதாவதொரு பிரிவில் இளநிலை அறிவியல் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 2,410 + அகவிலைப்படி பணி: Assistant - 52 தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. ரூ.2,359 + அகவிலைப்படி 

பணி: Security, Watchman - 35 தகுதி: 8 ஆம் வகுப்பு தேச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. ரூ.2,359 + அகவிலைப்படி வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32,37 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : திருச்சி மாவட்டத்தினை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடம் இருந்து உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தேர்வு செய்யப்படும் முறை : 

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நீதிமன்ற வளாகம், திருச்சிராப்பள்ளி - 620 001 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 30.11.2021 மேலும் விபரங்கள் அறிய www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment