பட்டயப்படிப்பில் சேர ஆசிரியர்களுக்கு வாய்ப்பு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 1 November 2021

பட்டயப்படிப்பில் சேர ஆசிரியர்களுக்கு வாய்ப்பு

டில்லியில் உள்ள, மத்திய கலாசார வளமற்றும் பயிற்சி மையம், ஆசிரியர்களுக்கான பல்வேறு பயிற்சிகளை, அவ்வப்போது வழங்கி வருகிறது. மைசூருவில் உள்ள, பள்ளிக்கல்வி மண்டல கல்வியியல் நிறுவனம் மூலம், ஆசிரியர்களுக்கான ஓராண்டு பட்டய படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

தொலைதுார மற்றும் இணையவழியில் படிக்கலாம். இதற்கு, அரசுப்பள்ளிகள், கேந்திர வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் என்ற, பட்டயப்படிப்பில் சேர விரும்புவோர், அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம், வரும், 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, இயக்குனரகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில், இதுசார்ந்த அறிவிப்பு, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment