ரயில்வேயில் வேலை வேண்டுமா..? தெற்கு ரயில்வேயில் குரூப் 'சி' வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண்.RRC 01/2021 

பணி: Clerk-cum Typist (Sports Quota) (2021-22) காலியிடங்கள்: 21 சம்பளம்: நிலை -2: மாதம் ரூ.19,900 - 63,200 நிலை-4: மாதம் ரூ.25,500 - 81,100 வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: நிலை-2 பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிலை-4 பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? 

 விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுகளில் ஏதாவதொன்றில் சர்வதேச, ஆசிய, தெற்காசிய போட்டி போன்ற ஏதாவதொன்றில் பங்குபெற்று குறைந்தபட்சம் 3 ஆவது மூன்றாவது இடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் விளையாட்டு தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். 01.04.2019 தேதிக்கு பிறகு பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டும் கண்க்கிடப்படும். மேலும் தற்போது சம்மந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். 

 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்,எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.rrcmas.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2021 மேலும் விவரங்கள் அறிய www.rrcmas.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Post a Comment

أحدث أقدم

Search here!