இமயம் முதல் குமரிவரை பிரபலமான "ஜிலேபி" - EDUNTZ

Latest

Search here!

Sunday, 14 November 2021

இமயம் முதல் குமரிவரை பிரபலமான "ஜிலேபி"



துருக்கி நாட்டிலிருந்து முகலாய மன்னர்களால் இந்தியாவிற்கு அறிமுகமான இனிப்பு வகை 'ஜிலேபி. ஆங்கிலேயர் காலத்தில், அனைத்து விசேஷங்களிலும் ஜிலேபி முக்கிய இனிப்பாக இருந்தது. 

இந்தியாவின் சுதந்திர நாளை அறிவித்தபோது, ஜிலேபியை அனைவருக்கும் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவின் சிறு கடைவீதிகளில் கூட ஜிலேபி தயாரிப்பதை காண முடியும். மற்ற இனிப்புகளில் இருந்து இதன் சுவை தனிப்பட்டு இருந்ததால் "ஜிலேபி' அனைவருக்கும் அபிமான இனிப்பாக மாறியது. 

பின்வரும் செய்திகளையும் படிக்கவும்



ஜிலேபியை தயார் செய்தவுடன் சூடாக அப்படியே சாப்பிடலாம். பால், உலர் பழங்கள் கொண்டு தயாரிக்கப் படும் கலவையில் மூழ்கச் செய்து குளிர்ச்சியாகவும் சாப்பிடலாம். மேற்கு வங்க மாநிலத்தில்தான் இந்த வகை இனிப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் ஜிலேபியை முஷபாக், ஜிலிபி, ஜிலாபி உட்பட பல பெயர்களில் அழைக்கிறார்கள். 

மைதா, தயிர், சர்க்கரைப் பாகுதான் இதற்கு அடிப்படையாக தேவைப்படும் பொருட்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் சில மாறுதல்களுடன் சுவை கூட்டப்பட்டு தயாரிக்கப்படுகிறது ஜிலேபி. ஜிலேபியைப்போல, பல இனிப்புகள் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரபலமாக இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்: தெலுங்கானா மாநிலத்தில் கடலைப்பருப்பு, வெல்லம் சேர்த்த பூரணத்தில், உளுந்து மற்றும் அரிசியைக் கலந்து அரைத்த மேல் மாவுடன் தயாரிக்கப்படும் ‘பூரணம் பூரேலு' எனும் இனிப்பு பிரபலமானது. 

சிக்கிம்மில், அரிசி மாவு, சர்க்கரை, வெண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் 'சியேல் ரொட்டி' புகழ் பெற்றது. மகாராஷ்டிர மாநிலத்தில் 'மோதகம்', பீகாரில் கோதுமை மாவுடன், சர்க்கரைப் பாகு, உலர்பழங்கள் கலந்து தயாரிக்கப்படும் பிஸ்கட் போன்ற 'தேக்குஞ்' பிரபலமானது. நாகலாந்தில் கோட் பீதா'வும், ஆந்திராவில், ஆப்ரிகாட் பழம் கொண்டு தயாரிக்கப்படும் 'குபானி கமீதா'வும், ராஜஸ்தானில் 'மலாய் கீவரும்', மணிப்பூரில் மதுர்ஜன் துங்பா'வும், உத்திரகாண்டில் 'சிங்கோதியும், தமிழகத்தில் 'பால் போளியும், ஹரியானாவில் 'சூர்மா'வும், கர்நாடகாவில் 'மைசூர்பாக் கும், மேகாலயாவில் புக்லையினும்', ஜார்க்கண்டில் 'மால்புவா'வும், குஜராத்தில் 'பாசந்தியும், உத்திரப்பிரதேசத்தில் 'பாதுஷா'வும், ஜம்முகாஷ்மீரில் 'சுஷ்ப்தா'வும், டெல்லியில் 'குல்பியும், மேற்கு வங்கத்தில் மிஷ்டி டோயும் பிரபலமான இனிப்புகளாகும்.

No comments:

Post a Comment