மத்திய அரசின் ஆராய்ச்சி அறிவுக்குழுக்களுக்கு
சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் சங்கம் பயிற்சி அளிக்கிறது
அறிவியலின் பல்வேறு துறைகளில், தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆராய்ச்சி அறிவுக் குழுக்களை நடத்தி வருகிறது.
இந்த ஆராய்ச்சி அறிவுக் குழுக்களோடு சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து செயலாற்ற இருக்கிறது.
அதன்படி, சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சங்கம் அறிவியல் தொடர்புகொள்திறன், ஆய்வறிக்கைகள் தயாரித்தல் போன்ற திறன்களை மேம்படுத்துவதற்கு ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் போன்றோர் அடங்கிய அறிவுக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கும்.
வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் போன்றவற்றுக்கு சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் அங்கம் வகிக்கும் துறை சார்ந்த நிபுணர்களின் ஆதரவை வழங்கும்.
இதுகுறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள எங்களுடைய அறிவுக்குழுக்களில் அங்கம் வகிக்கும் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு பயனளிக்கும் வகையில் இந்த தொழில்துறை, கல்வித்துறை முயற்சிகள் வலுப்பெற, வருங்காலத்திலும் இச்சங்கத்தோடு இணைந்து பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம்' என்றார்.
மேற்கண்ட தகவல் சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment