:கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு, மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'குரூப் - 4' தேர்வில் அடங்கிய பதவிகளுக்கு, 2019 செப்., 1ல் எழுத்து தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.
இதில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு, மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கவுன்சிலிங், வரும் 25ல் நடக்கிறது.
இதற்கான அழைப்பு கடிதம் மற்றும் கூடுதல் விபரங்களை டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment