வாழ்வில் வெற்றிபெற கல்வி முக்கியமானது. உயர்கல்வி படித்து அறிவை மேம்படுத்திக்கொள்வதன் மூலம் பொருளாதாரம் சமூகம் போன்ற நிலைகளில் உயர முடியும்
இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்கள் கல்வி பயில்வதற்கு தங்களது பெற்றோரை சார்ந்தே
இருக்கின்றனர். வளர்ந்த நாடுகளில் மாணவர்கள் தாங்களே வேலைப் பார்த்து தங்களது மேற்படிப்பை
படித்து கொள்கின்றனர். இந்த நடைமுறை தற்போது இங்கும் வளர்ந்து வருகின்றது. அவ்வாறு வேலை
பார்த்துக் கொண்டே வெற்றிகரமாக உயர்க்கல்வி பயில்வதற்கான வழிகள் சிலவற்றை இங்கே பகிர்கிறோம்.
முதலில் உங்களுக்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுங்கள். வேலையையும், படிப்பையும் எவ்வாறு சமநிலைப்
படுத்தி கையாளலாம் என்பதைப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுங்கள்.
எதார்த்தமான, வாழ்க்கைக்கு உகந்த சில இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நோக்கி முன்னேறுங்கள்.
நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்த முற்படுங்கள்.
எல்லாவற்றையுமே முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
அதாவது முந்தைய நாள் இரவில் உங்கள் கல்வி தொடர்பான செயல்முறையையோ, வேலை தொடர்பான
விஷயங்களையோ எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது பற்றி அட்டவணையிட்டுக் கொள்ளுங்கள். அவற்றோடு
அன்றைய நாளில் நீங்கள் செய்ய விரும்பும் அனைத்தையும் பட்டியல் போடுங்கள்.
வேலை பார்க்கும் இடத்தில் முதலாளியுடன் அல்லது சக ஊழியர்களுடன் நல்ல கருத்துகளை பகிர்ந்து,
அவர்களிடமிருந்து உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
இதன் மூலம் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். அந்த நிறைவான உணர்வு உங்கள் கல்வியை ஊக்கு
விப்பதாக அமையும்.
வேலையையும், படிப்பையும் நீங்கள் சமமாக கையாளும்போது உடல் நலத்தையும் கருத்தில் கொள்ள
வேண்டும்.
போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொண்டு ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
படிக்கும்போது பகுதி நேரமாக வேலை செய்வதில் கிடைக்கும் நன்மை என்னவென்றால், வேலை செய்வதன்
மூலம் நீங்கள் பொருளாதார பலத்தை பெறுவதோடு மட்டும் இல்லாமல், வேலை அனுபவத்தை முன்னதாகவே
பெற முடியும். மற்ற மாணவர்களை காட்டிலும் வேலை உலகிற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ள இந்த
முறை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment