உள்ளாட்சி வார்டு வாக்காளர் பட்டியல்; புதிதாக பெயர்களை சேர்க்க முடியுமா? 'இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் பெயர்கள் தான் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்' என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ஆணையத்தின் அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக மாநில தேர்தல் ஆணையம் தயாரித்து வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் 1ம் தேதி வெளியிட்டுள்ள சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளரின் பெயரும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் கருதுகிறது. உரிய படிவம் எனவே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் பெயர் சேர்த்தல் முகவரி மாற்றம் செய்ய விரும்புபவர்கள் வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது இணைய தளத்திலோ விண்ணப்பிக்கலாம். 

இணையதளம் வாயிலாக பெயர் சேர்க்க விரும்புவோர் தங்களது பெயர் மற்றும் இதர விபரங்களை https://www.nvsp.in என்ற முகவரி வாயிலாக பதிவு செய்து கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இணையதளம் வாயிலாக பதிவு செய்ய இயலாதவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முகவரி மாற்றம் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

புதிதாக சேர்க்கப்படுவோரின் பெயர்கள் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சேர்த்து வெளியிட்டப்பட்ட பின் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். எனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு திருத்த முகாம்களை பயன்படுத்தி தேவையான திருத்தங்கள் பெயர் சேர்க்கை முகவரி மாற்றம் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

أحدث أقدم

Search here!