கல்வி உதவி தொகை பதிவுக்கு அவகாசம் நீட்டிக்கப்படுமா? பெற்றோர் கோரிக்கை - EDUNTZ

Latest

Search Here!

Monday, 15 November 2021

கல்வி உதவி தொகை பதிவுக்கு அவகாசம் நீட்டிக்கப்படுமா? பெற்றோர் கோரிக்கை

சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்ப பதிவுக்கு அவகாசத்தை நீட்டிக்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. 

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களின் கல்வி ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில், பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களும், உயர் கல்வி படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 

இந்த விண்ணப்பங்களை, scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப விபரங்களை, முதற்கட்டமாக அந்தந்த பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும்.அதற்கு இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 2ம் தேதி முதல், பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் முறையாக இயங்கவில்லை. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பள்ளிகளே திறக்கப்படவில்லை. 

எனவே, மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டுஉள்ளது. சிறுபான்மையினர் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப அவகாசத்தை, இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

No comments:

Post a Comment