வேலைவாய்ப்பு குறித்த தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் மெட்ரோ ரெயில் நிறுவனம் எச்சரிக்கை - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 21 November 2021

வேலைவாய்ப்பு குறித்த தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் மெட்ரோ ரெயில் நிறுவனம் எச்சரிக்கை

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பல்வேறு துறைகள் உள்ளன. இந்த துறைகளின் கீழ் பல்வேறு பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன. 

இந்த துறைகளிலோ, துறை சார்ந்த பிரிவுகளிலோ ஏதேனும் வேலை வாய்ப்பு இருந்தால், அதற்கான முன் அறிவிப்பு அதிகாரபூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இதைத்தவிர தினசரி தமிழ் நாளிதழ், ஆங்கில நாளிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்பு தளங்களிலும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. 

எனவே, வேலைவாய்ப்புக்கு தகுதியுடையவர்கள், வேலைவாய்ப்பு தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளிவரும் வேலைவாய்ப்பு குறித்த அறிவுப்புகளை தெரிந்து கொள்ளலாம். இதைத்தவிர வேற எந்த ஒரு இணையதளத்திலும் வெளியாகும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். 

மேலும், இந்த நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருப்பதாக தவறாக இணையதளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment