குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு இன்று முதல் பதிவு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 3 November 2021

குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு இன்று முதல் பதிவு

அகில இந்திய குடிமை பணிக்கான முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், முதன்மை தேர்வுக்கான பயிற்சியை, தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் பெற, இன்று முதல் இணையத்தில் பதிவு செய்யலாம்' என்று தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார். 

ஊக்கத்தொகை 

 அவரது செய்திக்குறிப்பு:

சென்னை பசுமை வழிச்சாலையில், அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், 56 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையம் தமிழக கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. மாணவர்கள் இங்கு தங்கி, முதன்மை தேர்வுக்கு தயாராகின்றனர். அவர்களுக்கு சிறந்த பயிற்று நர்கள் வாயிலாக பயிற்சி அளிப்பதுடன், மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. முதன்மை தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு, மாதம் 3,000 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப் படுகிறது. தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று, முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று இருந்தாலும், இந்த பயிற்சி மையத்தில், முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெறலாம். 


 இந்த ஆண்டு 225 பேர் தங்கி படிக்க, சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர விரும்புவோர், இன்று மாலை 6:00 மணி முதல் 7ம் தேதி மாலை 6:00 மணி வரை, www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில், தங்கள் பெயரை பதிவு செய்யலாம். முன்னுரிமை இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் விபரம், 9ம் தேதி மாலை 6:00 மணிக்கு, இணையத்தில் வெளியிடப்பட்டு 10ம் தேதி சேர்க்கை நடக்கும்; 11ம் தேதி முதல் வகுப்புகள் துவக்கப்படும்.பொருளாதார ரீதியாக பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, பட்டியலின தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு இறையன்பு தெரிவித்து உள்ளார். Source News

No comments:

Post a Comment