ஆவணங்கள் புதுப்பிக்காத வாகனம் மீது நடவடிக்கை' - EDUNTZ

Latest

Search here!

السبت، 20 نوفمبر 2021

ஆவணங்கள் புதுப்பிக்காத வாகனம் மீது நடவடிக்கை'

ஆவணங்கள் புதுப்பிக்காத வாகனம் மீது நடவடிக்கை'





ஆவணங்கள் புதுப்பிக்காத வாகனம் மீது நடவடிக்கை' , 

ஆவண புதுப்பிப்புக்கான காலக்கெடு முடிந்த பின்பும், புதுப்பிப்புக்கு வராமல், சாலையில் இயங்கி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடபட்டுள்ளது. 

கொரோனா தொற்று பரவல் காரணமாக, வாகன ஆவண புதுப்பிப்பு 2020 மார்ச் 31ல் நிறுத்தப்பட் டது. அக்டோபர் 31 வரை ஏழு முறை கால அவ காசம் நீட்டித்து, உத்தரவு வெளியிடப்பட்டது. மேலும், ஆவணங்களை புதுப்பிக்காதவர், தவறாமல் புதுப்பிக்க, வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் வர வேண்டும் அல்லது ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

இனி, கால அவகாசம் நீட்டிக்கப்படாது என, அறிவுறுத்தப் பட்டது. இந்நிலையில், அரசின் கூடுதல் போக்குவரத்து ஆணையர் மணக்குமார், ஆர்.டி.ஓ., அலுவல கங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கால அவகாசம் முடிவுற்ற நிலையிலும், ஆவ ணங்களை புதுப்பிக்காமல், இயக்கப்படுவதாக தெரியவருகிறது. 

அவ்வாறு இயக்கப்படும் நிலை யில் விபத்து ஏற்பட்டால், காப்பீடு வழங்க இய லாது. காப்புச்சான்று, புகைச்சான்று மற்றும் இதர ஆவணங்கள் புதுப்பிக்காமல் இயங்கும் வாகனங்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق