தினம் ஒரு தகவல் தஞ்சாவூர் மாத்திரை 

இன்றைய தடுப்பூசிகளின் முன்னோடி சித்த மருத்துவம். கி.பி. 1545-ல் தென் தமிழகத்தில் பெரியம்மை வராமல் தடுக்க, பெரியம்மை பாதிக்கப்பட்டவர்களின் கட்டியிலிருந்து ஊசியில் குத்தி, நோய் வராதவர்களுக்கு ஊசியிட்டு நோய் வராமல் தடுக்கும் வழக்கம் ஓவியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இம்முறை தற்காலத் தடுப்பூசி முறை பிறக்க வழிவகுத்தது என்றால் மிகையாகாது. டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் டேனிஷ் மிஷனரியைச் சேர்ந்த பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் பாதிரியார் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் சித்த மருந்தான ‘விட மாத்திரை' என்கிற தஞ்சாவூர் மாத்திரையை, தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு பரம்பரை வைத்தியர் வழங்கிவந்தது 1788-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பாம்புக்கடி, வெறிநாய்கடி, யானைக்்கால் ேநாய்க்கு நன்கு பயன் தருகிறது என்று அப்போதைய சென்னை மாநில கவர்னர், ராணுவ மருத்துவ குழுத்தலைவரான டாக்டர் ஜேம்ஸ் ஆண்ட்ரூசனிடம் கூறி, அதன் பயன்பாட்டை உறுதி செய்ய அறிவுரை வழங்கப்பட்டது. 

 தஞ்சாவூர் மாத்திரை என்ற சித்த மருந்தைப் பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானாதால், சம்பந்தப்பட்ட பரம்பரை வைத்தியருக்கு 200 பகோடா பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது என்று 1788-ல் மெட்ராஸ் கூரியர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது ஒரு பகோடா என்பது இன்றைய 3360 ரூபாய்க்கு சமம். 

அப்படியானால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத் தொகையின் இன்றைய மதிப்பு ரூ.6,72,000. பொதுவாக அக்காலச் சித்த மருத்துவர்கள் மருந்து செய்முறையை வெளியிடுவதில்லை. அதேநேரம், தஞ்சாவூர் மாத்திரைக்குப் பெருமளவு பணம் பரிசாகத் தரப்பட்டதால், மக்கள் உயிரைக் காக்கும் பொருட்டு அதன் செய்முறையை பரம்பரை வைத்தியர் விளக்கினார். 

இதுவே அந்த மாத்திரை தடை செய்யப்படுவதற்கு காரணமாகிவிட்டது. தஞ்சாவூர் மாத்திரை நல்ல முறையில் குணமளித்தாலும், அதிலிருந்த வெள்ளைப் பாடாணம் என்ற வெள்ளை ஆர்செனிக்கை ஆங்கில மருத்துவர்கள் அறிந்தனர். ஆர்செனிக் நஞ்சாகக் கருதப்பட்டதால் இந்திய பாம்பியலின் தந்தை பேட்ரிக் ரஸ்ஸஸ், அந்த மாத்திரையையே தடை செய்துவிட்டார். அதேநேரம், வெறிநாய்க்கடி நோய் பாதித்த நோயாளிகளுக்கு 2015 வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் போன்றவற்றால் ஏற்படும் இறப்பைத் தஞ்சாவூர் மாத்திரையால் தடுக்க முடிந்தது. 

அதைப் பரவலாக்க வேண்டும் என்ற டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் ஆகியோரின் முயற்சி 250 ஆண்டுகளாக மக்களைச் சென்றடையாமல் காத்திருக்கிறது. எனவே பாம்புக்கடி மற்றும் வெறிநாய்க்கடி நோய் என்ற சவாலான இரண்டு நோய்களுக்கு மீண்டும் ஆய்வுகளை முடுக்கிவிட்டு தஞ்சாவூர் மாத்திரையை மேம்படுத்திக் கண்டுபிடித்தால், தமிழ் மருத்துவத்துக்கு உயரிய விருதுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

Post a Comment

Previous Post Next Post

Search here!