அரசு அருங்காட்சியகம் சார்பில் குழந்தைகள் தின ஓவியப்போட்டி - EDUNTZ

Latest

Search Here!

Friday, 26 November 2021

அரசு அருங்காட்சியகம் சார்பில் குழந்தைகள் தின ஓவியப்போட்டி

அரசு அருங்காட்சியகம் சார்பில் குழந்தைகள் தின ஓவியப்போட்டி 

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 8, 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி வரும் 28ம் தேதி நடக்கிறது. வேலூர் மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார் பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் 8, 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மட்டும் பங்கேற்கும் ஓவியப்போட்டி நடக்கிறது. 

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் வரும் 27ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்கள் பெயர்களை அருங்காட்சியகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாண விகளுக்கு போட்டி நடக்கும் இடத்தில் ஓவியம் வரை வதற்கான தாள் மட்டும் வழங்கப்படும். பிற பொருட்களை மாணவ, மாணவிகளே தங் கள் சொந்த பொறுப்பில் கொண்டு வர வேண் டும். அதேபோல் ஒரு பள்ளிக்கு 3 பேர் மட்டுமே போட் டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இத்தக வலை அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment