ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்ட்’ பிரிவின் இறுதிப்போட்டியில் பரபரப்புக்கு மத்தியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா 146-145 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் ஒ போக்யுனை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 

கடைசியாக தென்கொரியா வீராங்கனை எய்த அம்பு 10 புள்ளி இலக்கில் குத்தியதாக தென்கொரியா அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட குழுவினர் செய்த அப்பீலை நடுவர் நிராகரித்ததால் சற்று நேரம் சர்ச்சை நிலவியது. 

முன்னதாக அரைஇறுதியில் ஜோதி சுரேகா 148-143 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான கிம் யுன்ஹீயை (தென்கொரியா) சாய்த்து இருந்தார். ஆந்திராவை சேர்ந்த 25 வயதான ஜோதி சுரேகா கடந்த செப்டம்பர் மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 3 வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post

Search here!