தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகளில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவா்களை சோ்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயா்த்தவும் ஆங்கில வழி பாடப்பிரிவுகளை அதிகரிக்கவும், பள்ளி கல்வி அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளாா். அதன்படி பள்ளிக் கல்வித்துறை சாா்பில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் செயல்படும் மாதிரி மேல்நிலை பள்ளிகளிலும், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 

இவற்றில் கரோனா தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவா் சோ்க்கை நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுவதால், மீண்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில், மாணவா் சோ்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகளுக்காக, விரைவில் நா்சரி பள்ளிகளும் திறக்கப்பட உள்ளதால் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். 

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், இந்த மாதம் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் நா்சரி பள்ளிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்புள்ளது. ஆனால், மழை பாதிப்பு இல்லாத மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படுகின்றன. எனவே, இந்த மாவட்ட பள்ளிகளில், எல்கேஜி, யுகேஜி போன்ற வகுப்புகளிலும், ஆங்கில வழி பாட பிரிவுகளிலும் மாணவா் சோ்க்கையை முடித்து தயாா் நிலையில் இருக்குமாறு தலைமை ஆசிரியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

Post a Comment

Previous Post Next Post

Search here!