இயந்திரப் பொறியியலில் வேலை வாய்ப்புகள் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 15 November 2021

இயந்திரப் பொறியியலில் வேலை வாய்ப்புகள்

இயந்திர பொறியியலில் வேலைவாய்ப்புகள்! 

இயந்திரங்கள் இல்லாமல் தொழிற்சாலைகள் இல்லை. இயந்திரவியல்தான் பொறியியலின் அடிப்படை. 

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டபோது தான் பொறியியல் என்ற புதிய துறை பிறக்கிறது. எல்லாத் தொழில்களிலும் பொறியியல் கால்பதித்தது மட்டுமல்லாது, புதுமையான பொருள்களின் தயாரிப்புக்கும் காரணமாக அமைந்து விட்டது. 

வேளாண்மையில் பயன்படுத்தப்படும் மாட்டுவண்டி, நீரேற்று சக்கரம் அல்லது உருளைவிசை சக்கரம், போர்க்களத்திற்கு தேவையான வாள்கள், கவண் மற்றும் பீரங்கிகள், எகிப்தில் பிரமீடுகளின் கட்டுமானம் உள்ளிட்ட பழம்பெரும் அதிசயங்களின் கட்டுமானங்கள் அனைத்தும் பொறியியலில் செய்யப்பட்ட புதுமைகளின் அடையாளங்களாக உள்ளன. இயந்திரங்களால் தொழிலகங்கள் மேம்பட்டுள்ளது மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியும் முன்னோக்கி நகர்ந்துகொண்டுள்ளன. இயந்திரப் பொறியியல், பொறியியல் வளர்ச்சி உந்து விசையாக இருந்து வந்துள்ளது. தற்போது, இயந்திரப் பொறியியல் (மெக்கானிகல் என்ஜினியரிங்) கடல் போன்ற மாற்றங்களை தினந்தோறும் உள்வாங்கிக்கொண்டுள்ளது. 

தானியங்கி வாகனங்கள் (ஆட்டோமொபைல்) தொடங்கி விண்வெளி பொறியியல் உள்ளிட்டதொழிலக பொறியியல் வரையில் இயந்திரப் பொறியியல் அடைந்திருக்கும் வளர்ச்சி பரந்துபட்டதாகும். டிஜிட்டல் காலம் எனப்படும் கணினி காலத்திலும் இயந்திரப் பொறியியல் தனது முக்கியத்துவத்தை இழக்காமல் இருக்கிறது. 

தகவல் தொழில் நுட்பத்துறை அல்லது உயிரி மருத்துவத்துறைக்கு இயந்திரப் பொறியியல் எந்தவகையில் பங்காற்ற முடியும்? என்ற கேள்வி மனதில் எழுவது இயல்புதான். பங்காற்ற முடியும் என்பது மட்டுமல்ல, புதிதாக இனி எத்தனை துறைகள் வந்தாலும், அங்கும் இயந்திரப் பொறியியல் பங்காற்ற தொடங்கிவிடும் என்பது தான் வரலாறும், பொருளாதாரமும் நமக்கு விட்டு செல்லும் தகவலாகும்.

இயந்திரப் பொறியியல் பங்காற்றும் துறைகள்: 

உயிரிமருத்துவம் (பயோ மெடிக்கல்) மற்றும் மருந்துதொழில்:

உயிரிமருத்துவம் மற்றும் மருந்துதொழிலில் வழக்கத்தில் இருக்கும் அதிநவீன தொழில் நுட்பங்கள் அனைத்தும், வடிவமைப்பு மற்றும் தயாரிப்புத்திறன் படைத்த இயந்திரப் பொறியாளர்களின் பங்களிப்பால் உருவாக்கப்பட்டவையாகும். மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் சாதாரணமான சிரிஞ்ச் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் கூட மருத்துவத்தரத்திலான நெகிழியை சிரிஞ்சாக வடிவமைக்கும் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இதுபோன்ற இயந்திரங்களைப் பராமரிக்கும் சாதாரண வேலையை செய்வதற்கு கூட இயந்திரப் பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

வானூர்தியியல்: 

வானூர்தியியல் (ஏரோநாட்டிக்ஸ்) தொடர்பான பொருட்களைத் தயாரிப்பதற்கு மெட்டீரியல் சயின்ஸ், உற்பத்தி செய்முறை, தெர்மல் என்ஜினியரிங், ஃப்ளூயட் மெக்கானிக்ஸ், வடிவமைப்பு பொறியியல் போன்ற இயந்திரப் பொறியியல் சார்ந்த அறிவு தேவைப்படுகிறது. விமானங்களின் பராமரிப்பில் இயந்திரப் பொறியாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். சென்சார்ஸ் உள்ளிட்ட பல கருவிகளிடம் இருந்து கிடைக்கும் தரவுகளைத் திறனாய்வு செய்து தரும் தகவல்களின் அடிப்படையில் தான் விமானப் பராமரிப்பு சாத்தியமாகிறது. 

விமானங்களில் உள்ள துணைப் பொருட்களை பழுதுபார்ப்பது அல்லது புதிதாக மாற்றுவது போன்ற முடிவுகளை எடுப்பதற்கு இயந்திரப் பொறியாளர்களின் தரவு திறனாய்வு முக்கியமானதாக இருக்கிறது. உணவுத் தொழில்: உணவு பதனிடும் தொழிலில் ஈடுபடுத்தப்படும் இயந்திரங்கள் தானியங்கி இயந்திரங்களாக மாறியுள்ளன. உணவு பதனிடும் இயந்திரங்களின் உற்பத்தி தவிர, ஆட்டோமேஷன், ரோபோட்டிக்ஸ், உற்பத்திமுறை, சென்சார் தொழில்நுட்பம், எனப்படும் மின்னணு இயந்திரவியல், அழிவில்லாத சோதனை நுட்பங்கள் போன்ற இயந்திரப் பொறியியல் நுட்பமும் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன.

உணவுத் தொழில்:

உணவு பதனிடும் தொழிலில் ஈடுபடுத்தப்படும் இயந்திரங்கள் தானியங்கி இயந்திரங்களாக மாறியுள்ளன. உணவு பதனிடும் இயந்திரங்களின் உற்பத்தி தவிர,  ஆட்டோமேஷன்,  ரோபோட்டிக்ஸ், உற்பத்திமுறை, சென்சார் தொழில்நுட்பம்,  எனப்படும் மின்னணு இயந்திரவியல், அழிவில்லாத சோதனை நுட்பங்கள் போன்ற இயந்திரப் பொறியியல் நுட்பமும் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன.


வாகனத் தொழில்: 

வாகனத்தொழிலில் இயந்திரப் பொறியாளர்களின் பங்களிப்பு முதன்மையாக விளங்குகிறது. தானியங்கி வாகனத்தின் ஒவ்வொரு பொருட்களின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கு இயந்திரப் பொறியியல் அறிவு அத்தியாவசியமாகிறது. இதில், உலோக வார்ப்பு, வெல்டிங், மெஷினிங், தெர்மோ டைனமிக்ஸ், என்ஜினியரிங் எகனாமிக்ஸ், வடிவமைப்பு பொறியியல், மெக்கட்ரானிஸ் போன்றவை அடங்கும். ஒருசில இயந்திரப் பொறியாளர்கள், மென்பொருள் இயக்கவியல் குறித்தும் அறிந்துவைத்திருப்பார்கள். 

சிறப்புக் கல்வி: 

இயந்திரப் பொறியியல் படித்தவர்களுக்கு இன்றைக்கும் நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. பிரபலமான ஒரு சில கல்லூரிகளில் இண்டஸ்டிரியல் என்ஜினியரிங், மெக்கானிக் டிசைன், ரோபோட்டிக்ஸ், இண்டஸ்டிரியல் டிசைன், புராடக்ட் டிசைன், தொழிலக வடிவமைப்பு, பொருள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு, உற்பத்தி பொறியியல், மின்னணு இயந்திரவியல் போன்ற பாடப்பிரிவுகளில் எம்.டெக், எம்.எஸ். போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளும், முதுநிலை பட்டயப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற படிப்புகள், இயந்திரப் பொறியாளர்களின் மதிப்பை உயர்த்தும், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும். செயல்பாட்டு ஆராய்ச்சி, செயல்முறை மேலாண்மை, ஆர்கனைசேஷனல் பிகேவியர் போன்ற பாடப்பிரிவுகளும் இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு கைகொடுக்கும். 

வேலை வாய்ப்பு: 

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில், செயல்முறை மேம்படுத்தல், சங்கிலி மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய தொழிலக பொறியியல் துறையில் இயந்திரப் பொறியாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளன. உற்பத்தி (ஆட்டோமொபைல்கள், விமான பாகங்கள், உள்நாட்டு பயன்பாடுகள் தொடர்பான பொருட்கள், மின்னணு சாதனங்கள், வார்ப்பகங்கள், எஃகு ஆலைகள்), வடிவமைப்பு (தானியங்கி வாகனங்கள் மற்றும் தானியங்கி வாகன பாகங்கள், விமான பாகங்கள், இயந்திரங்கள், கட்டமைப்புகள் போன்றவை), அனல் பொறியியல் (கொதிகலன்கள், மின் உற்பத்தி நிலையங்கள், ஆட்டோமொபைல் துறை, விண்வெளித் துறை போன்றவை), தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (வணிக ஆய்வாளர், புரோகிராமர், சோதனையாளர், மேலாண்மை நடவடிக்கைகள் போன்றவை) போன்ற துணைப்பிரிவுகள் ஏராளமாக இருப்பதால் இயந்திரப் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன. 

கப்பல்படை, விமானப்படை, ராணுவப்படை உள்ளிட்ட பாதுகாப்புசார்ந்த தொழிலகங்களில் இயந்திரப் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்புகளும் தாராளமாக உள்ளன. இயந்திரப் பொறியியல் துறையில் இளநிலை ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்து ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் குவிந்துள்ளன. இயந்திரப் பொறியியல் படித்துள்ள பட்டதாரிகளுக்கு புதுமையான சிந்தனைப்போக்கும், தலைமைப்பண்புகளும் இருந்துவிட்டால், சொந்தமாகவே தொழில் முனைவோராக உருவெடுக்கலாம். 

அண்மைகால சரிவுகளைக் கடந்து, இயந்திரப் பொறியியல் துறை என்றைக்கும் அழியாமல் பசுமையாக இருந்துவந்துள்ளது. அதனால் தான், பொறியியல் கல்லூரிகளில் இயந்திரப் பொறியியலை பயலும் மாணவர்களின் எண்ணிக்கை குறையாமல் நிலையாக உள்ளது.

No comments:

Post a Comment