🔴அரிசியில் உள்ள டைரோசினேஸ் தோலில் மெலாமின் உருவாகுவதை கட்டுப்படுத்துகிறது. இதுவே தோல் பகுதியில் உள்ள அதிகபட்ச எண்ணெய் போன்றவற்றை நீக்குகிறது.
உடலில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க் விரட்டி அடிக்க அரிசி மாவு உதவும்.
🔴அரிசிமாவுடன் மஞ்சள் தூள், காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். இதை ஸ்ட்ரெச் மார்க் இருக்கும் இடங்களில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
🔴அரிசி மாவு 3 டீஸ்பூன், பன்னீர் 3 டீஸ்பூன் மற்றும் தயிர் 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். பிறகு நன்கு மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும்.
🔴30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும். அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதை கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம்
🔴 அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும்.
அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும்.
🔴முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் நன்கு ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
🔴பிறகு ஐஸ்கட்டிகள்கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும்.
மேக் அப் கலைப்பதற்கு அதிக நேரம் பிடிக்கிறது என்பவர்கள் எளிதாக முகத்தை சுத்தம் செய்ய அரிசி மாவு பயன்படுத்தலாம்.
🔴அரிசிமாவை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி இலேசாக ஐந்து நிமிடங்கள் தேய்த்து கழுவிய பிறகு முகத்தை பார்த்தால் மேக் அப் முழுவதும் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும்.
No comments:
Post a Comment