மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 13 November 2021

மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்

மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சி.இ.ஓ., கீதா அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேற்று நடந்தது. 

23 அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், 'மழை காலங்களில் மின்சாதனங்கள், வெளியிடங்களில் மின்சார ஒயர்கள், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் உரிய பாதுகாப்புடன் செயல்பட மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பொது போக்குவரத்து பயன்படுத்தும் போதும், சாலைகளை கடக்கும் போதும், நீர் நிலை சார்ந்த இடங்களிலும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என சி.இ.ஓ., கீதா அறிவுறுத்தினார்.

கொரோனா பாதுகாப்பு, அதிக மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு மாற்றுப்பணி வழங்குதல், பள்ளி மானிய பயன்பாடு உள்ளிட்ட நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக சி.இ.ஓ., தெரிவித்தார்.

No comments:

Post a Comment