செவ்வாழையில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் !! - EDUNTZ

Latest

Search here!

Monday, 8 November 2021

செவ்வாழையில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் !!

✅செவ்வாழையில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் !! செவ்வாழையில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் எ, புரதம், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. 

✅ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்துள்ளது.இது உங்கள் உடலிற்குமுக்கிய தேவையான கரையும் நார்ச்சத்து ஆகும். நார்ச்சத்து தினமும் தேவையான அளவு எடுத்து வந்தால் உங்களுக்கு மலசிக்கல், செரிமான கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். 

✅செவ்வாழையில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. பொட்டாசியம் உங்களுக்கு சிறுநீரக கற்கள், இரத்த அழுத்தம்,இருதய நோய், புற்று நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். 

✅தினமும் ஒரு செவ்வாழை பழம் உண்டு வருபவர்களுக்கு இரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சினை வராமல் தடுக்கும். நமது சருமம், முடி, மூட்டு மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஒரு செவ்வாயில் தினமும் தேவையான அளவில் 16% வைட்டமின் சி நிறைந்துள்ளது. 

✅செவ்வாழையில் இரத்த உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு செவ்வாழை பழத்தினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை, இரத்த குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். 

✅செவ்வாழையில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது.இதனை நீங்கள் உண்டுவந்தால் உங்களின் கண் ஆரோக்கியம்மேம்படும். 

✅மேலும் உங்களுக்கு பார்வை கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்பார்வை திறனை அதிகரிக்கும். 

 ✅உடல் எடை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் ஆரோக்கியமான உடல் எடையினை அதிகரிக்க விரும்புவார்கள் தினமும் இரண்டு செவ்வாழை பழத்தினை உண்டு வரலாம்.

No comments:

Post a Comment