தொடர் மழை எதிரொலியாக பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சில அறிவுரைகளை அனுப்பியிருக்கிறது. தொடர் மழை வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சார்பில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில் கூறப்பட்டிருக்கும் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:- 

 * தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகவும் ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவரில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்பு அமைப்பதோடு, அதனை கண்காணிக்கவும் வேண்டும். கண்காணிக்க வேண்டும் 

 * பழுதடைந்த நிலையில் வகுப்பறைகள் இருந்தால் அதனை பூட்டி வைப்பதோடு, மாணவர்கள் அங்கு செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். மேலும் பள்ளி வளாகத்தில் இடிக்கப்பட வேண்டிய நிலையிலிருக்கும் கட்டிடங்கள் இருந்தால் அதனை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். 

 * பள்ளிகளில் மின் இணைப்பு சரியாக உள்ளதா என ஆய்வு செய்வதோடு மட்டுமில்லாமல், மின்கசிவு, மின் கோளாறு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

 * பள்ளி வளாகத்தில் நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால் அது சரியாக மூடப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிசெய்து மாணவர்கள் அதற்கு அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு செல்லக்கூடாது

 * விடுமுறை நாளில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளுக்கு மாணவர்கள் குளிக்கச் செல்வதை தவிர்த்திட அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும். குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகில் செல்லக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். 

 * பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை கண்டிப்பாக இயக்க அறிவுறுத்த கூடாது. மருத்துவ சிகிச்சை 

 * பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி வளாகத்தில் கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடந்தால் அந்த இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடைவிதிக்கவும், பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்புகளை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

 * பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரைகளை ஏற்கனவே அறிவுறுத்தியபடி வழங்குவதோடு, மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post

Search here!