வாயு தொல்லையை அதிகரிக்கும் உணவுகள் என்ன தெரியுமா? - EDUNTZ

Latest

Search here!

Monday, 15 November 2021

வாயு தொல்லையை அதிகரிக்கும் உணவுகள் என்ன தெரியுமா?

குடலில் புழுக்கள் இருந்தாலும் வாயு தொல்லைக்கு காரணமாக அமையும். மாத்திரைகள் குறிப்பாக பேதி மாத்திரை ஆஸ்துமா மாத்திரை போன்ற மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் வாயு தொல்லை அதிகரிக்கும். சாப்பிடும் பொழுது உணவுகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். நன்றாக மென்று சாப்பிடும் பொழுது உணவு இலகுவாக ஜீரணமாகிறது. 

உணவு சமிபாட்டு பிரச்சனையும் வாயு தொல்லைக்கு முக்கிய காரணம். இரவு உணவை சாப்பிட்ட உடன் தூங்க செல்வதை தவிர்க்க வேண்டும். இது சமிபாட்டு பிரச்சனையை உருவாக்கும். உறங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே இரவு உணவை சாப்பிடுவது சிறந்தது. உடலில் தண்ணீரின் அளவு குறையும் பொழுது பல பிரச்சனைகள் வருகின்றன. 

அதில் ஒன்று தான் வாயு தொல்லை. தினமும் சரியான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். வாயு பிரச்சனையை தரும் உணவுகளை அன்றாட உணவுகளில் குறைத்துக் கொள்வது சிறந்தது. வாயு தொல்லையை அதிகரிக்கும் சில உணவுகள்: பருப்பு, வாழைக்காய், உருளை கிழங்கு, மரவள்ளி கிழங்கு, சக்கரவள்ளி, கிழங்கு, மசாலா உணவுகள், செயற்கை பானங்கள், பால், முளைகட்டிய தானியங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள். முக்கியமாக அதிக காபோவைதரேட் உள்ள உணவுகள் வாயு தொல்லைக்கு காரணமாக அமைகின்றது.

No comments:

Post a Comment