கொசுக்களும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளும் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 14 November 2021

கொசுக்களும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளும்



மழைக்காலம் இனிய தருணங்களை தந்தாலும், நோய்கள் பரவும் வாய்ப்பும் அதில் சேர்ந்தே வருகிறது. பருவ மழைக்காலத்தில் கொசுக்கள் மூலம் மட்டுமே அதிகமான நோய்கள் பரவுகின்றன. கொசுக்களின் தோற்றம் இன்று உலகம் முழுவதும் முழுவதும் பரவி இருக்கும் கொசுக்கள், முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்பப்படுகிறது. 

இதையும் படிக்கவும்




தற்போது உலகில் 2700 வகையான கொசுக்கள் உள்ளன. இவை நீர்நிலைகள் உள்ள இடங்களில் அதிகமாக உருவாகும். பெண் கொசுக்கள் சராசரியாக 100 முட்டைகளை ஒரே நேரத்தில் இடும். மனிதர்கள் மற்றும் விலங்குகள் பயன்படுத்துகின்ற நீர்நிலைகள், கொட்டாங்குச்சி, தண்ணீர் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக் பொருட்கள் முதலியவற்றில் தேங்கும் மழைநீரிலும் கொசுக்கள் முட்டை இடும். 

< div style="text-align: justify;">கொசுக்களால் ஏற்படும் நோய்கள்: 

கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா மற்றும் யானைக்கால் போன்ற பல நோய்கள் பரவுகின்றன. உலகம் முழுவதும் மூன்று வகையான கொசுக்களே அதிக அளவிலான நோய்களைப் பரப்புகின்றன. மலேரியா மற்றும் யானைக்கால்நோயை பரப்பும் அனாபிலஸ் கொசு, டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ் கொசு மற்றும் மூளைக் காய்ச்சலை பரப்பும் கியூப்லெக்ஸ் கொசு. பெரும்பாலும் பெண் கொசுக்களே நோய்களைப் பரப்புகின்றன. 

கொசுக்களை எவ்வாறு விரட்டலாம்? 

கொசுக்களை விரட்டுவதற்கு ரசாயனங்கள் கலந்த கொசு விரட்டிக்கு மாற்றாக சில செடி வகைகளை பயன்படுத்தலாம். இவற்றின் நறுமணம் கொசுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாக்கும். புதினா, துளசி, ரோஸ்மேரி, , ஊதாச் செடி, சாமந்தி, பூண்டுச்செடி, கிராம்பு போன்ற செடிகளை வீட்டின் முற்றத்தில் மட்டுமின்றி, ஜன்னல் ஓரத்திலும் வளர்க் கலாம். 

மேலும் மாலை நேரங்களில் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் கற்பூரம் ஏற்றி வைப்பதன் மூலம் கொசுக்கள், பூச்சிகள் போன்றவை உள்ளே நுழைவதைத் தடுக்கலாம். சுற்றுப்புறத் தூய்மை அவசியம் வீட்டைச் சுற்றி குப்பைகளையும், இதர பிளாஸ்டிக் கழிவுகளையும் சீராக அகற்றி, தூய்மையாக வைத்திருந்தால் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியும். இதன் மூலம் நோய்கள் பாதிப்பு இல்லாமல், ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

No comments:

Post a Comment