தீபாவளி தபால் தலை - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 4 November 2021

தீபாவளி தபால் தலை

முக்கிய தலைவர்கள், முக்கிய தினங்களை நினைவு கூரும் விதமாகவும், அதுபற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லும் விதமாகவும்தான் தபால் தலைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

இதே போல பல நாடுகளும் அந்தந்த நாடுகளுக்கு ஏற்றாற்போல தபால் தலைகளை வெளியிட்டுக் கொள்ளும். உலகத்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் தீபாவளி கொண்டாடப்படுகிறது. 

கனடா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, மொரீஷியஸ், பிரான்ஸ், நேபாளம் மற்றும் ஏராளமான தமிழர்கள் வாழும் நாடுகளில் வெகு விமரிசையாக தீபாவளி கொண்டாடுவது பல காலமாக நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் தபால் தலைகளும் வெளியிடப்பட்டுள்ளது. 

இதையும் படிக்கவும்





தீபாவளியின் சிறப்பை கூறும் விதமாக தீபாவளி தபால் தலையை இந்தியாவும், கனடாவும் இணைந்து வெளியிட்டுள்ளது. அதாவது கனடா தனி நாடாகி 150-வது ஆண்டு - இந்தியா சுதந்திரம் பெற்ற 70-வது ஆண்டை நினைவு கூரும் வகையில், 21.9.2017 அன்று 2 தபால் தலைகளை வெளியிட்டு தீபாவளியின் பெருமையை உலகிற்கு தெரிவித்துள்ளார்கள். 

இந்தியாவும், கனடாவும் நீண்ட காலமாக நட்புடன் இருப்பதற்கு அடையாளமாக இந்த தபால் தலை வெளியீடும் அமைந்துள்ளது. இரண்டு நாடுகளும் வணிக முதலீடு, அறிவியல் தொழில் நுட்பம், விவசாயம், அணு ஆயுதம் மற்றும் மருத்துவ தொழில் நுட்பம் போன்ற நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இணைந்து செயல்பட்டுக் கொண்டுள்ளன.

No comments:

Post a Comment