மனிதர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் பேசி தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம். விலங்குகளும்கூட குரலை எழுப்பி தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. மனிதர்கள், விலங்குகள் போல செடி, கொடிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. 

செடிகள் தங்களுக்குள் வேதியியல் மொழியில் பேசிக்கொள்கின்றன. வாசனையை பயன்படுத்தி அவை தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தை எளிதாகச் செய்கின்றன. 

சில செடிகள் 100 வேதியியல் வார்த்தைகளுக்கு மேல் தெரிந்து வைத்திருக்கின்றனவாம். என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? செடிகள் அந்த வேதியியல் வார்த்தைகளை பூச்சிகளை பற்றி தெரிவிக்கவும், ஏதாவது உதவிக்கு அழைக்கவும் பயன்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, ஒரு கம்பளிப்பூச்சி மக்காச்சோளத்தை சாப்பிட்டால், செடியில் இருக்கும் குளவிகளுக்கு புரியும்படி ‘எச்சரிக்கை வேதிப்பொருட்களை’ அந்தச் செடி வெளியிடும். 

எச்சரிக்கை கிடைத்தவுடன் அச்செடியின் குளவிகள் கம்பளிப்பூச்சிகள் மீது முட்டையிடும். இது கம்பளிப்பூச்சிகளை உடனடியாக அழித்துவிடும். தக்காளிகளை சாப்பிடும் கம்பளிப்பூச்சிகளை அழிப்பதற்காக தக்காளி செடிகள் நச்சுகளை வெளியிடுகின்றன. அத்துடன், பிற செடிகளையும் வாசனை மூலம் எச்சரிக்கும். 

அதே மாதிரி, சில மூலிகை செடிகளில் இருக்கும் முக்கியமான எண்ணெய்களும்கூட தகவல்களை பரிமாற உதவுகின்றன. இவை மகரந்த சேர்க்கைக்கான பூச்சிகளை கவர்ந்திழுக்கும். ஆனால், மற்ற பூச்சிகளை வரவேண்டாம் என்று சொல்லித் தடுக்கும். இனிமேல், செடிகள் பேசுமா என்று யாராவது கேட்டால், தைரியமாகப் பதில் சொல்லுங்கள் ‘செடிகள் பேசும்’ என்று...!

Post a Comment

Previous Post Next Post

Search here!