மழைக்கால பயணங்களில் கவனிக்க வேண்டியவை!!! - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 7 November 2021

மழைக்கால பயணங்களில் கவனிக்க வேண்டியவை!!!



பெண்கள் தங்களின் தேவை மற்றும் அலுவல்கள் காரணமாக வெளியே செல்வது தவிர்க்க முடியாதது. அவ்வாறு செல்லும்போது அவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப் பாக மழைக்காலங்களில் மழை நீர் தேக்கம், சாலை களின் மேடு பள்ளங்கள், பாதாள சாக்கடை திறப்புகள், மின்கம்பங்கள் போன்றவை சாலை பயணங்களை கேள்விக் குறியாகவும், சில நேரங்களில் ஆபத்தான தாகவும் மாற்றுகின்றன. 

மழைக் காலம் தொடங்கும் பொழுது, இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும் பெண்கள் தங்கள் வாகனத்தின் அனைத்து பாகங்களும் சரியாக இயங்குகிறதா என சரி பார்த்துக் கொள்வது சிறந்தது. முக்கியமாக வண்டியின் பிரேக், டயர் ஆகியவை சரியான நிலையில் இருக்கிறதா என கவனிக்க வேண்டும். 

இதன் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம். மேலும் வாகனத்தில் ஹெட் லைட் மற்றும் இண்டி கேட்டர் போன்றவை சரியாக இயங்குகிறதா என சோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. மழைக்காலங்களில் வாகனத்தின் பிரேக்கை அழுத்தும் பொழுது, உடனடியாக ஒரே நேரத்தில் இரு பிரேக்குகளையும் அழுத்தாமல், மெதுவாக ஒன்றன் பின் ஒன்றாக அழுத்த வேண்டும். 

தினமும் வெளியே செல்வதற்கு முன் போதுமான அளவு பெட்ரோல் இருக்கிறதா? என சரி பார்த்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்கலாம். மழைக் காலங்களில் அதிக வேகத்தில் செல்வதை தவிர்த்து மெதுவாக செல்வது நல்லது. 

மேலும் சாலையில் செல்லும் போது நிதானமாக பயணிக்க வேண்டும். எதிரில் வேகமாக வரும் வாகனம் மற்றும் அதிக சப்தம் ஏற்படுத்தும் ஹாரன் ஒலி பெண்களுக்கு எளிதில் பதற்றத்தை உருவாக்கக் கூடும். இரு சக்கர வாகனம் உபயோகிப்பவர்கள் வாகனத்தில் செல்லும் போது ஹெட்போன் உபயோகிக்காமல் இருப்பது சிறந்தது. ஏனெனில் மழைக்காலங்களில் வாகனத்தில் செல்லும் போது சாலையில் கவனம் வைத்து செல்ல வேண்டும். 

நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர், பின்னால் வரும் வாகனங்களின் சத்தம் கேட்குமாறு ஒலி பெருக்கிகளை குறைவான சத்தத்தில் வைத்துக் கொள்வது சிறந்தது. தனியாகச் செல்லும் பொழுது தெரியாத நபர்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான ஆட்கள் வழி மறித்தால் நிறுத்தாமல் செல்வது பாதுகாப்பானது. 

பெரிய வாகனங்களின் பின்னால் செல்லும்போது குறிப்பிட்ட இடைவெளி விட்டு செல்ல வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் குடைகளை உபயோகிக் காமல் 'ரெயின் கோட்' அணிந்து செல்லலாம். 

விளம்பர பதாகைகளின் அருகில் செல்லாமல் விலகிச் செல்வது சிறந்தது. மழைக்காலங்களில் வளைவுகளில் திரும்பும் பொழுதும், வண்டியை நிறுத்தும் பொழுதும் இண்டி கேட்டர் ஒலி மற்றும் ஒளி சமிக்ஞை செய்வது அவசியமானதாகும். மற்ற காலங்களை விட மழைக் காலங்களில் சாலையில் செல்லும்போது அதிக கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment