முகத்தை அழகாக்கும் சில அற்புத அழகு குறிப்புகள் !! - EDUNTZ

Latest

Search here!

Monday, 8 November 2021

முகத்தை அழகாக்கும் சில அற்புத அழகு குறிப்புகள் !!

✅🛑முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. 

✅🛑இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும். 

✅🛑சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக்கொள்ளலாம். 

✅🛑நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கரு வளையங்கள் மறையும். 

உதடுகள்: 

✅🛑தினமும் சிறிதளவு 'வேசலின்' எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும். 

✅🛑 எண்ணெய் பசையுள்ள சருமத்தை 'வால்நட் ஸ்க்ரப்' கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான 'பேபி ஆயில்' கொண்டும் துடைக்கலாம்.

No comments:

Post a Comment