தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 27 November 2021

தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

 இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் ஜனவரி 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 1-ந் தேதியில் இருந்து ஜனவரி 5-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. 

 மேலும், வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் மாற்றங்கள் மேற்கொள்வதற்கும் வசதியாக 27-ந் தேதி (இன்று, சனிக்கிழமை) மற்றும் 28-ந் தேதி (நாளை, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. 

 மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைபேசி செயலி (Voter Helpline Mobile App) ஆகிய ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment