அன்றாட சமையலில் கடலை எண்ணெய் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் !! - EDUNTZ

Latest

Search here!

Monday, 15 November 2021

அன்றாட சமையலில் கடலை எண்ணெய் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் !!

கடலை எண்ணெய்யில் குறைந்த அளவிலேயே உடலுக்கு தீங்கு விளைவிக்காத குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்து இருக்கின்றன. கடலை எண்ணெய்யை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகின்றன. 

இந்த எண்ணையில் இருக்கும் வைட்டமின் இ சத்து இருதயத்தை சிறப்பாக செயல்பட செய்கிறது. உடலில் இருக்கும் திசுக்கள் மற்றும் செல்களில் வளரக்கூடிய புற்று நோயை எதிர்த்து கடலை எண்ணெய் சிறப்பாக செயல்புரிவதாக பல மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் கடலை எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவதால் அவர்களின் மூளை செல்கள் புத்துணர்ச்சி பெரும். நரம்புகள் பாதிப்பு, ஞாபக மறதி போன்ற குறைபாடுகளும் நீங்கும். 

சிறிதளவு கடலை எண்ணெய்யை எடுத்து வலி ஏற்படும் மூட்டு பகுதிகளில் நன்கு தடவி, சிறிது நேரம் மெதுவாக பிடித்து விட்டால் சிறிது நேரத்திலேயே மூட்டு வலி நீங்கும். உணவில் கடலை எண்ணெய் அதிகம் உபயோகிப்பதால் அதில் இருக்கும் வைட்டமின் இ சத்து முடிகொட்டல் பிரச்சனையை போக்கி தலைமுடி ஆரோக்கியமாகவும், நல்ல வளர்ச்சியும் பெற உதவுகிறது. கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும்.

No comments:

Post a Comment