மணக்கோலத்தில் வந்து நூலகத்தின் புரவலராக இணைந்த தம்பதி - EDUNTZ

Latest

Search Here!

Monday, 15 November 2021

மணக்கோலத்தில் வந்து நூலகத்தின் புரவலராக இணைந்த தம்பதி



உடுமலையைச் சேர்ந்தவர் ஜெயசிங். இவர்,பல்லடம் அரசுக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்குமுன்பு ரோசி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், உடுமலையில் இயங்கிவரும் அரசு கிளை நூலகத்துக்கு திருமணக் கோலத்தில் மனைவியுடன் வந்த ஜெயசிங், நூலகத்தில் ரூ.1,000 செலுத்தி தங்களை புரவலராக இணைத்துக் கொண்டனர். 

 இதுகுறித்து அவர் கூறும்போது, 

‘‘நூலகங்களை பெருமளவிலான மக்கள் பயன்படுத்த வேண்டும். அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தவே மணக் கோலத்தில் மனைவியுடன் வந்து, புரவலராக இணைத்துக்கொண்டேன்,’’ என்றார். நூலகர்கள் வீ.கணேசன், மகேந்திரன், பிரமோத் மற்றும் நூலக வாசகர் வட்டத்தினர், புதுமணத் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து புத்தகத்தை பரிசாக வழங்கினர்.

No comments:

Post a Comment