இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளுக்கு கோவின் இணையதளம் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டவர்கள் இந்த தளத்தின் வழியாக சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த தளத்தில் தற்போது எந்த ஒரு தனிநபரின் தடுப்பூசி நிலவரம் குறித்து அறியும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகம் செய்து உள்ளது.
அதன்படி அவரது பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை கொண்டு அவர் தடுப்பூசி போட்டுள்ளாரா? எத்தனை டோஸ் போட்டிருக்கிறார்? என்பன போன்ற விவரங்களை பெறலாம்.
தற்போது பெரும்பாலான சேவைகளுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த புதிய வசதி பெரும் பயனுள்ளதாக இருக்கும் என அரசு கூறியுள்ளது.
குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் தடுப்பூசி நிலவரங்களை, பயண நிறுவனங்கள் தங்கள் பயணிகளின் தடுப்பூசி நிலவரங்களையும் பரிசோதிக்க முடியும் எனவும் தேசிய சுகாதார ஆணைய தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment