எய்ம்ஸ் நிறுவனத்தில் நர்சுகளுக்கு பணி (பி.எஸ்சி & டிப்ளமோ) - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 27 November 2021

எய்ம்ஸ் நிறுவனத்தில் நர்சுகளுக்கு பணி (பி.எஸ்சி & டிப்ளமோ)

நர்சுகளுக்கு பணி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) பாட்னா மையத்தில் நர்சிங் அதிகாரி (ஆண்-160, பெண்-40) பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி நர்சிங் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ நர்சிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். வயது தளர்வு உண்டு. எழுத்து தேர்வு, திறனறிவு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-11-2021. விண்ணப்பிப்பது பற்றிய விரிவான விவரங்களை https://aiimspatna.edu.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment