தினம் ஒரு தகவல் கிளட்ச் பராமரிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 6 November 2021

தினம் ஒரு தகவல் கிளட்ச் பராமரிப்பு

வாகனங்களில் மிகவும் முக்கியமானது கிளட்ச். இதில் பழுது ஏற்பட்டால் கிளட்ச் அசெம்பிளி முழுவதையும் மாற்ற நேரிடும். வாகனம் ஓட்டுவதில் சில எளிய நடைமுறைகளைப் பின்பற்றினால் இது பழுதடையாமல் நீண்டகாலம் உழைக்கும். வழிமுறைகள் இங்கு தரப்பட்டுள்ளன. 

எப்பொழுதும் கியர் மாற்றிய பிறகு கிளட்ச் பெடலின் மீது கால் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து, தேவையான பொழுது மட்டும் கிளட்சைப் பயன்படுத்தினால் தேய்மானம் குறைந்து அதிக கிலோ மீட்டர் வரை பழுதாகாமல் உழைக்கும். கிளட்ச் பெடலின் மீது கால் வைத்து வாகனம் ஓட்டுவதால் விரைவில் கிளட்ச் ஷட்டரிங் ஏற்பட்டு, வாகனத்தில் முதல் கியர் போட்டு இயக்க ஆரம்பிக்கும் போது ஒருவித அதிர்வுடன் இயங்க ஆரம்பிக்கும். 

கிளட்ச் பெடலின் மீது கால் வைத்து வாகனம் ஓட்டுவதால் கிளட்ச் பிளேட்டின் தேய்மானம் அதிகரிப்பதோடு ரிலீஸ் பேரிங் மற்றும் பிளை வீலும் விரைவில் பழுதடைந்து அதிக செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. கிளட்ச் கேபிள் முறையாக இயங்கும் வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு கிளட்ச் கேபிள் கடினமாக ஆகி விட்டால் அதை உடனடியாக மாற்றி விடுவது நல்லது. இதனால் கிளட்சின் ஆயுட் காலம் அதிகரிக்கும். 

 ஹைட்ராலிக் கிளட்ச் ஆக இருந்தால் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை தவறாமல் கிளட்சில் உள்ள எண்ணெய்யை மாற்றி விட வேண்டும். அவ்வாறு மாற்றுவதால் கிளட்ச் மாஸ்டர் சிலிண்டர், ஸ்லேவ் சிலிண்டர் விரைவில் பழுதாவதை தவிர்க்க முடியும். கிளட்ச் பெடலை மிதிக்கும் போது மிகவும் கடினமாக இருப்பதாக‌ உணர்ந்தால் அப்படியே வாகனத்தை இயக்குவதை தவிர்த்து, பணிமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்து கொள்வது சிற‌ந்தது. அவ்வாறு சோதித்து கொள்வதன் மூலம் பெறும் சேதத்தை தவிர்க்க முடியும்.

No comments:

Post a Comment