வங்கி பணியில் சேர வாய்ப்பு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 12 November 2021

வங்கி பணியில் சேர வாய்ப்பு

வங்கி பணியில் சேர வாய்ப்பு

வங்கிகளில் காலியாக உள்ள 1,831 பணியிடங்களுக்கு, வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஐ.பி.பி.எஸ்., எனும் வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள், வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் வாயிலாக நிரப்பப்படும். 

தற்போது கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி உட்பட, பல்வேறு பொதுத் துறை வங்கி களில் காலியாக உள்ள 1,831 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தொழில்நுட்ப அதிகாரி 220; வேளாண் கள அதிகாரி 884; ஹிந்தி மொழி அதிகாரி 84; சட்ட அதிகாரி 44; மனித வள அதிகாரி 61; மார்க்கெட்டிங் அதிகாரி 535 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு, 30 வயதுக்குள் உள்ள நபர்கள், வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 'ஆன்லைன்' தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக, இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் விபரங்களை, www.ibps.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment