பள்ளிக் கல்வி அமைச்சரால் மண்டல அளவில் நடத்தப்படும் ஆய்வு கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை வெளியீடு!!! - EDUNTZ

Latest

Search here!

Friday, 26 November 2021

பள்ளிக் கல்வி அமைச்சரால் மண்டல அளவில் நடத்தப்படும் ஆய்வு கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை வெளியீடு!!!

பள்ளிக்கல்விஆணையரகம் 

அனுப்புநர் 

க.நந்தகுமார், இ.ஆ.ப., 
ஆணையர், 
பள்ளிக்கல்வி, 
டி.பி.ஐவளாகம், 
சென்னை-6) 

பெறுநர் 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். 

ந.க.எண்:59699/ பிடி1/இ2/2021, 
நாள்: 25.11.2021 

பொருள் : |

பள்ளிக்கல்வி மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்துதல் தகவல் தெரிவித்தல் - சார்பு 

பார்வை : 

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின்  அறிவிப்பு, நாள்:12.10.2021 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக, அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டு ஆய்வு செய்ய இருக்கின்றனர். மேலும், இவ்வாய்வுக்கூட்டம் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்தில் இரண்டு நாட்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். அக்கூட்டத்தின் முதல் நாளில் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பள்ளி பார்வை மேற்கொள்வர்,இரண்டாம் நாள் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் தொடர்புடைய கன அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இக்கூட்டங்களுக்கான அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கூட்டப்பொருள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். 

ஆணையருக்காக 
பள்ளிக்கல்வி 


இணைப்பு: ஆய்வுக்கூட்டஅட்டவணை 

நகல் : 

1. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9.(தகவலுக்காக அனுப்பப்படுகிறது) 
2. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-6. (தகவலுக்காக அனுப்பப்படுகிறது) 
3. அனைத்து இயக்குநர்கள் (தகவலுக்காக அனுப்பப்படுகிறது) 
4. நேர்முக உதவியாளர், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலகம், சென்னை-9. (தகவலுக்காக அனுப்பப்படுகிறது)







No comments:

Post a Comment