அசத்தும் அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' : பாலக்காடு அருகே செயல்படும் அரசு ஆரம்ப பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டுள்ளது.


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது நெம்மாரா என்ற பகுதி, இங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குவது போல், மாணவர்களின் பாதுகாப்புக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து மாணவர்களுக்கும் 'ஸ்மார்ட கார்டு்' வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் ஒவ்வொரு பகுதியிலும் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. 

மாணவர்கள் வருகைப்பதிவு 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் அபாய ஒலி எழுப்பும் 'சைரன்' அமைக்கப்பட்டுள்ளன.இங்கு பயிலும் மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று, மீண்டும் வீடு திரும்பும் வரை அனைத்து தகவல்களும் பெற்றோர்களின் மொபைல் போன் எண்ணிற்கு உடனே வந்துவிடும்.

இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும், இப்பகுதியில் உள்ள எலவஞ்சேரியை சேர்ந்த சனல்-தன்யா குடும்பத்தினர் செய்து கொடுத்துள்ளனர்.சிறிதும் எதிர்பாராத இந்த வசதிகளை பார்த்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

أحدث أقدم

Search here!