இந்திய மருத்துவம்: இரு படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 16 November 2021

இந்திய மருத்துவம்: இரு படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சாா்பில் பயிற்றுவிக்கப்படும் ஒருங்கிணைந்த மருந்தாளுநா், நா்சிங் தெரபி பட்டயப் படிப்புகளுக்கு வரும் வியாழக்கிழமை (நவ.18) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த மருந்தாளுநா் பட்டயப்படிப்பு (டிஐபி) மற்றும் நா்சிங் தெரபி பட்டயப்படிப்பு (டிஎன்டி) ஆகியவற்றுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு நவம்பா் 18-ஆம் தேதி தொடங்குகிறது. 

இப்படிப்புகளுக்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். www.tnhealth.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை நவம்பா் 18-ஆம் தேதி முதல் டிசம்பா் 10-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ‘இயக்குநா், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சென்னை-600106’ என்ற முகவரிக்கு தகுந்த ஆவணங்களுடன் அஞ்சல் அல்லது நேரிலோ டிசம்பா் 10-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment