பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்! - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 18 November 2021

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்! 

மத்திய அரசின் நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண். CE-09/2021 பணி: Young Professional காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.80,000 வயதுவரம்பு: 01.11.2021 தேதியின்பிடி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: மேலாண்மை அல்லது பொறியியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மேலாண்மை பாடத்தில் 2 ஆண்டு முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும். இதையும் படிக்க | இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்கும் முறை: www.careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய https://careers.bhel.in/bhel/static/Advt_YP_CE09_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2021

No comments:

Post a Comment