பள்ளிகளில் பாலியல் தொல்லை: 'உதவி எண் குறித்து விழிப்புணர்வு தேவை' - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 16 November 2021

பள்ளிகளில் பாலியல் தொல்லை: 'உதவி எண் குறித்து விழிப்புணர்வு தேவை'

பள்ளிகளில் பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் அளிக்க ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் குறித்து பெற்றோர் - மாணவர்களிடையே விழிப்புணர்வு தேவை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

 இது தொடர்பாக பேசிய அவர், கோவை மாணவி தற்கொலை வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகம் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்று கூறினார். கல்விக் கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். 

 பள்ளிகளில் பாலியல் தொல்லை இருந்தால் 14417 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்று கூறிய அமைச்சர், உதவி எண்ணை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும், இது குறித்து பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment