அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பி.என்.ஓய்.எஸ். [B.N.Y.S] மருத்துவ பட்டப்படிப்பக்கு விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 3 November 2021

அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பி.என்.ஓய்.எஸ். [B.N.Y.S] மருத்துவ பட்டப்படிப்பக்கு விண்ணப்பிக்கலாம்

இந்திய மருத்துவம் மற்றும் 7 ஓமியோபதி இயக்குநரகம், சென்னை - 600 106. அறிவிக்கை 

தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரசுமற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு பி.என்.ஓய்.எஸ். [B.N.Y.S] மருத்துவ பட்டப்படிப்பில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை 03.11.2021 முதல் 25.11.2021 முடிய மாலை 5.00 மணி வரை மட்டும் சுகாதாரத்துறையின் வலைதளமான "www.tnhealth.tn.gov.in”- னிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட பி.என். ஒய்.எஸ். (B.N.Y.S) படிப்பிற்கான அரசு மற்றும் சுயநிதி (சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினரற்ற) யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு, பொது மற்றும் சிறப்பு விண்ணப்ப பதிவிறக்கம் மற்றும் அவற்றின் கட்டணம், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதிமுறைகள், படிப்பின் விவரம், சிறப்பு பிரிவினர், அடிப்படைத்தகுதி, கல்விக்கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு "www.tnhealth.tn.gov.in" என்ற வலைதள முகவரியை அணுகவும். 



No comments:

Post a Comment