கணினி நூலகம் அவசியம் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 29 November 2021

கணினி நூலகம் அவசியம்

இவ்வுலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் எண்ணும், எழுத்தும் இரண்டு கண் போன்றது என்று வள்ளுவர் கூறுகிறார். அப்படி கண்ணிற்கு நிகரான கல்வியை நாம் எங்குபெற முடியும்?. ஒன்று பள்ளியில் மற்றொன்று நூலகத்தில் தான். கண்டவற்றை படித்தால் அறிஞர் ஆகலாம் என்பது நம் முதாதையர்களுடைய அருங்கருத்து. இந்த கருத்திற்கு பொருத்தமான பெயர் தான் நூலகம். 

ஏனென்றால் நூலகம் ஒரு மனிதனை அறியாமையில் இருந்து அறிவுடையவன் ஆக்குகின்றது. மேலும் அவனை உலக அறிவை பெற செய்து அறிஞன் ஆக்குகிறது. அப்படிப்பட்ட நூலகம். இப்படி அமைந்தால் நன்றாக இருக்கும் என்ற கற்பனை கலந்து கட்டுரையாகி உள்ளது. இந்த கனவு நூலகத்தின் ஒரு பகுதி இயற்கை நூலகமாகும். அதாவது சிறைச்சாலை போன்று சுற்றி நான்கு சுவர்கள் இல்லாமல் மின்விசிறியின் ஓசையில்லாமல் தென்றல் காற்றின் ஓசையால் நிழல்தரும் மரங்களின் அடியில் அமர்ந்து மனதிற்கு அமைதி தரும் நூல்களை கற்பதேயாகும். 

இதுதான் இயற்கை நூலகம். வயதானவர்களும், குழந்தைகளும் பயன்படுத்தும் வகையில் அமைய வேண்டும். இங்கே மரங்களை குடைந்து அதிலும் அறைகள் அமைத்து புத்தகங்களை வயதினருக்கு ஏற்றாற்போல் வரிசைப்படுத்தி வைக்க வேண்டும். வயதானவர்களுக்கென்று ஒரு பகுதி. குழந்தைகளுக்கென்று ஒரு பகுதி என பிரித்து நல்ல கருத்துள்ள புத்தகங்கள் அறிவை பெருக்கும் புத்தகங்கள், ஓவிய புத்தகங்கள் போன்ற பல அரிய வகையான புத்தகங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். 

இவ்வாறு இயற்கை நூலகம் பார்ப்பதற்கு நூலக பூங்கா போன்று அமைய வேண்டும். இயற்கை நூலகத்தை அடுத்து ஒரு வானுயர்ந்த கட்டிடமாக முதன்மை நூலகம் அமைய வேண்டும். இந்த நூலகத்தில் உலகில் உள்ள அனைத்து நூல்களும் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு மொழி நூல்களும் ஒவ்வொரு தளத்தில் இடம் பெற வேண்டும். எந்தவித சாதி, மதமின்றி அனைத்து புத்தகங்களும் கனவு நூலகத்தில் இடம் பெறும் வகையில் அமைக்க வேண்டு. 

ஒரு தளம் அமைக்க வேண்டும். உலகில் உள்ள அனைத்து நாளிதழ்கள், ஒரு தளத்தில் அமைய வேண்டும். மேலும் முதன்மை நூலகத்தின் ஒரு பகுதி கணினி நூலகமாக அமைய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நூகலத்தில் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு ஆசிரியர் இருக்க வேண்டும். நூல்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஆசிரியரிடம் கேட்டு தெளிவுபடுத்தி கொள்ளும் வகையில் கற்றலில் தேர்ந்த ஆசிரியர்களை அமர்த்த வேண்டும். 

உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் புத்தகங்களை படிப்பதை போன்று கம்ப்யூட்டரில் படிப்பது திருப்தியாக இல்லை என்றார். ஆனால் இன்றைய தலைமுறையினர் இணைய தலைமுறையினராய் உள்ளனர். அலைபேசியும், இணையமும் அவர்களுடைய இரு கண்களாய் மாறிவிட்டது. அப்படிப்பட்டவர்களை கற்றலில் ஈர்ப்பதற்காக கணினி நூலகம் அமைக்க வேண்டும். அனைத்து நூல்களையும் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

இது மக்களின் சந்தேகங்களை இணையத்தின் வாயிலாக பெறுவதற்கு பயனுள்ளதாக அமையும். மேலும் பல நவீன கணினி தொழில் நுட்பங்களை நூலகத்தில் பெருக்க வேண்டும். நூலாலே ஆகுமரம் நுண்ணறிவு என்பது அவ்வையார் கூற்று. நாம் படிக்கும் அளவிற்கு ஏற்பவே நம்முடைய அறிவு வளர்ச்சி அடையும். அதற்கு முதுகெலும்பாக திகழ்வது நூலகமே. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு ஏற்றாற்போல் நூலகம் கற்றவர்களை உருவாக்க அவர்கள் எங்கு சென்றாலும் சிறப்புடன் வாழ செய்யும்.

No comments:

Post a Comment