அறிவோம் துணைமருத்துவப் படிப்புகள்: பெர்பியூஷன் டெக்னாலஜி மருத்துவப் படிப்பு (Perfusion Technology)
மருத்துவத்துறையில் மருத்துவராவதற்காக படிப்பது மட்டுமே மருத்துவ படிப்பல்ல. மருத்துவத்துறையில் பல்வேறு தொழில்நுட்பப் படிப்புகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அதில் மருத்துவர்களுக்கு உதவியாக பல்வேறு தொழில் நுட்ப உதவியாளர்கள் ஆவதற்கான படிப்புகளும் உள்ளன. அதுகுறித்து பலருக்கு தெரிவதில்லை.
மருத்துவத்துறையில் இருதய நோய் பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பெர்பியூஷன் தொழில்நுட்ப உதவியாளர் என்றால் யார்?
இருதய சிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப்படும் இருதய அறுவை சிகிச்சையின் போது அறுவை சிகிச்சை அரங்கில் மருத்துவருக்கு உதவியாக இருக்கும் முக்கியமானவர் பெர்பியூஷனிஸ்ட் என்னும் தொழில் நுட்ப உதவியாளர்.
அறுவை சிகிச்சையின் போது உடலின் ரத்த ஓட்டம், நின்றுவிடாமல் இருக்க இவர்கள் கண்காணிக்கின்றனர்.
திறந்தநிலை இதய அறுவைசிகிச்சையின் போது இதயம் மற்றும் நுரையீரல் செயல்படாது. அதற்கு மாற்றாக தற்காலிமான கருவி நோயாளிக்கு பொருத்தப்படும். இதை பொறுத்தி, இயக்க வேண்டியது கிளினிக்கல் பெர்பியூஷனிஸ்ட் டெக்னாலஜிஸ்ட்டின் வேலை. இது தவிர நோயாளியின் உடலில் ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைட் அளவை சீராக பாரமரிப்பது, ரத்த ஓட்டத்தை, ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்காணிப்பதும் இவர்களது பொறுப்பு. அறுவை சிகிச்சையின் போதே நோயாளிகளுக்கு மருந்து செலுத்த இவர்கள் உதவுகின்றனர். இவ்வாறான பணிகளை மேற்கொள்ள இவர்கள் மனித உடலின் ரத்த ஓட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியதும், சிக்கலான கருவிகளை கையாள தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம்.
படிப்புகள்
அத்தகைய பெர்பியூஷனிஸ்ட் ஆக வேண்டுமானால் அது சம்பந்தமான படிப்பைப் படிக்க வேண்டும்.
Diploma in Perfusion Technology
B.Sc., Perfusion Technology
M.Sc., Perfusion Technology
பிஎஸ்சி பெர்பியூஷன் டெக்னாலஜி, எம்.எஸ்சி. பெர்பியூஷன் டெக்னாலஜி படிப்புகள் பல்வேறு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.
பெர்பியூஷன் டெக்னாலஜி படிப்புகளை நடத்தும் சில கல்வி நிறுவனங்கள் :
தமிழ்நாடு:
Stanley Medical College, Chennai
Apollo Institute Of Hospital Management and Allied Sciences, Chennai
MMM College of Health Sciences, Chennai
Sri Ramachandra Institute of Higher Education and Research, Chennai
Sri Ramachandra College of Biomedical Sciences, Technology & Research, Chennai
A.J. Institute of Medical Sciences & Research - http://ajims.edu.in/
WebPages/Default.
EMPIRE COLLEGE OF SCIENCE -http://www.empirecollege.in/
Frontier Lifeline Hospital - http://www.frontierlifeline.com/
Jawaharlal Institute of Postgraduate Medical Education and
Research (JIPMER) - http://jipmer.edu.in/
Kerala University of Health Sciences - http://kuhs.ac.in/
KLE Academy of Higher Education & Research - http://kledeemed
university.edu.in/
MMM College of Health Sciences - http://mmmchs.org/index.php
Manipal College of Allied health sciences - https://manipal.edu/
soahs-manipal.html
வேலை வாய்ப்பு:
இந்த படிப்பை முடித்த மாணவர்கள் பெரிய மருத்துவமனைகளில் வேலைக்கு சேரலாம். அல்லது கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகவோ, ஆராய்ச்சியாளராகவோ பணியாற்றலாம்.
மருத்துவமனைகளில் பெர்பியூஷன் குழுவை வழிநடத்த வேண்டியது தலைமை பெர்பியூஷனிஸ்ட் பொறுப்பு. மருத்துவ துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த கிளினிக்கல் பெர்பியூஷனிஸ்ட் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது.
இது ஒரு சவாலான துறை என்பதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனை, பி.எஸ்.சி., படிப்பாக பெர்பியூசன் டெக்னாலஜியை வழங்குகிறது.
பிளஸ் 2வில் கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் படித்த மாணவர்கள் இந்த படிப்பில் சேர முடியும். பி.எஸ்.சி., இயற்பியல் படித்த மாணவர்கள் நேரடியாக முதுகலை படிப்பில் சேரலாம்.
(Perfusion Technology is a diploma/degree course that involves the study of the concepts and principles of biochemistry, pathology, and physiology and related surgical methods and equipment involved in organ function and support during medical and surgical operations directed by healthcare physicians.)
0
No comments:
Post a Comment