சென்னையில் எல்.ஐ.சி ஹவுசிங் வழங்கும் ‘இனிய உங்கள் இல்லம் 2021' - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 18 December 2021

சென்னையில் எல்.ஐ.சி ஹவுசிங் வழங்கும் ‘இனிய உங்கள் இல்லம் 2021'

எல்.ஐ.சி ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட் நிறுவனம் வழங்கும் இனிய உங்கள் இல்லம் 2021' வீடு மற்றும் வீட்டுக் கடன் கண்காட்சி டிசம்பர் 18 மற்றும் 19ம் தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை 2 நாட்களுக்கு சென்னை , கிழக்கு தாம்பரம், சேலையூரில் உள்ள ஸ்ரீ வாசுதேவா திருமண மாளிகையில் நடைபெறுகிறது. 

இக்கண்காட்சியினை பார்வையிடுவதற்கான அனுமதி இலவசம். இக்கண்காட்சியினை சின்ன 18.12.2021 காலை 11 மணியளவில் எல்.ஐ. சிஹவுசிங் ஃபினான்ஸ்லிமிடெட் சென்னை தெற்கு மண்டல மேலாளர் திரு.கோவிந்தராஜூ அவர்கள் துவக்கி வைக்கிறார். எல்.ஐ.சி ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட் சென்னை தெற்கு மண்டல துணை மேலாளர் (மார்க்கெட்டிங்) திருமதி.எஸ்.பத்மாவதி மற்றும் டி.ஏ.சி.டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் திரு.எஸ்.சதீஷ் குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றுகிறார்கள். வீட்டுக் கடன் மேளா இக்கண்காட்சியில் எல்.ஐ.சி.ஹவுசிங் ஃபினான்ஸ் நிறுவனத்தின் பிரத்தியேக கடன் வழங்கும் குழு செயல்படுகிறது. 

இங்கு வீட்டுக் கடன் 6.66%* என்ற சிறப்பு வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. மேலும் வீடு கட்ட, வீட்டுமனைகள் வாங்க, வீட்டில் மாறுதல்கள் செய்ய மற்றும் அடமானக் கடன் ஆகியவற்றை குறைந்த வட்டி விகிதத்தில் பொதுமக்கள் பெற முடியும். மிகவும் குறைந்த பரிசீலணை கட்டணம் வசூலிக்கப்படும். / 

இக்கண்காட்சியில் முன்னணி பில்டர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே பொதுமக்கள் தங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டுமனைகள் ஆகியவற்றை தேர்வு செய்து வாங்கி மகிழலாம். பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சியினை சிறப்பான முறையில் பயன்படுத்தி பயன்பெறலாம்.

No comments:

Post a Comment