கடற்படையில் வேலை: செய்லர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 43,100 Jobs in the Navy: Applications Welcome to Sailor Job | Salary: Rs. 21,700 - 43,100 - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 21 December 2021

கடற்படையில் வேலை: செய்லர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 43,100 Jobs in the Navy: Applications Welcome to Sailor Job | Salary: Rs. 21,700 - 43,100

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.12.2021 இந்திய கடற்படையில் செய்லர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: SAILORS (Sports Quota Entry-01/2022 Batch) தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு போட்டிகள்: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொரு விளையாட்டில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி குறைந்தபட்சம் 3 ஆம் இடம் பிடித்திருப்பது விரும்பத்தக்கது. 

 சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 43,100 

வயதுவரம்பு: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் 17 முதல் 22க்குள்ளும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 17 முதல் 21க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் விளையாட்டு தகுதிகள் அடிப்படையில் இந்திய கடற்படை நடத்தும் மருத்துவத் தேர்வு மற்றும் விளையாட்டு திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். 

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.12.2021

No comments:

Post a Comment