26-12-2021 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் Massive Private Sector Employment Camp on 26-12-2021 - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 21 December 2021

26-12-2021 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் Massive Private Sector Employment Camp on 26-12-2021

செய்தி குறிப்பு திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருவாரூர் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் மயிலாடுதுறை புதுத்தெருவில் உள்ள நியூபாரத் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். 

மேலும், உயர்கல்வி, சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கிகடன் குறித்து சம்மந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து வழிகாட்டவுள்ளனர். இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ. நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை பதிவிறக்கம் (Download) செய்து முகாமிற்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்

No comments:

Post a Comment