விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு உணவு, வசிப்பிட கட்டணம் ரூ.400 ஆக உயர்வு அரசாணை வெளியீடு தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சட்டசபையில் மானியக் கோரிக்கையின்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

அதில், விடுதிகளில் தங்கிப்படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு உணவு மற்றும் வசிப்பிட கட்டணத்தை பாகுபாடின்றி வழங்குவதற்காக, கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப்படிக்கும், பட்டப்படிப்பு மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர கட்டணமாக ரூ.175; தொழில்கல்வி படிப்போருக்கு ரூ.350; பட்டயப்படிப்பு மற்றும் முதுகலை படிப்போருக்கு ரூ.225 என்று வழங்கப்படுவதை, அனைவருக்கும் ரூ.400 என்று உயர்த்தி வழங்கப்படும். 

இதற்கு ரூ.9 கோடி கூடுதல் செலவாகும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து அரசுக்கு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் கடிதம் எழுதினார். அதில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் 95 ஆயிரம் பேர் இதனால் பயனடைவார்கள் என்றும் அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவரது கருத்துருவை அரசு ஏற்று அதற்கான ஆணையை பிறப்பிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!