சப்-கலெக்டர் உள்பட 66 பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு மார்ச் 4-ந்தேதி தொடங்குகிறது டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Wednesday, 15 December 2021

சப்-கலெக்டர் உள்பட 66 பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு மார்ச் 4-ந்தேதி தொடங்குகிறது டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிக்கப்பட்ட சப்-கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 66 பணியிடங்களுக்கான குரூப்-1 பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வுக்கு கிட்டதட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. 

அதன்படி, இந்த தேர்வை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதனைத்தொடர்ந்து முதன்மைத் தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:- குரூப்-1 பதவிகளில் காலியாக இருந்த 66 பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு (2022) மார்ச் மாதம் 4, 5 மற்றும் 6-ந்தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்காக தற்காலிகமாக 3 ஆயிரத்து 800 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment