பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (BIM) இரண்டாண்டு எம்பிஏ படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம் (Bharathidasan Institute of Management, Tiruchirappalli அல்லது (BIM-Trichy)) 1984ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்ட தனித்த மேலாண்மைக் கல்வி நிறுவனமாகும். இந்த நிறுவனம் முழுநேர வணிக நிர்வாகத்தில் பட்டமேற்படிப்பையும் (எம்பிஏ) முகவர் படிப்புகளையும் பல மேலாளர் கல்வித் திட்டங்களையும் வழங்குகிறது.
இங்கு 2022 ஆண்டுக்கான, எம்பிஏ படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்பிஏ.,வில் மார்கெட்டிங், ஃபினான்ஸ், டிஜிட்டல் வணிகம் & அனலைடிக்ஸ், மனிதவளம், ஆப்ரேஷன் மேனஜ்மென்ட் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றது.
இப்படிப்பில் சேர இளநிலை அல்லது முதுகலை பட்டப் படிப்புடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வெழுதி தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
CAT 2021, GMAT Jan 2020-Dec 2021, XAT 2022 ஆகிய நுழைவுத்தேர்வுகளின் மதிப்பெண்கள் மட்டுமே சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
2022, ஜனவரி 31 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்ளளது.
விரிவான தகவல்களுக்கு www.bim.edu என்ற இணைதயளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment